ராம்லீலா மைதான பொதுகூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால் எழுப்பிய 3 கேள்விகள்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் 3 கேள்விகள் எழுப்பி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பாஜ பிரசார கூட்டத்தில், கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். நிருபர்களுக்கு பேட்டி அளித்து கெஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 கேள்விகளை முன் வைக்கிறேன். மாநிலத்தில் சீலிங் நடவடிக்கைக்கு மத்தியில் ஆளும் பாஜவால் ஏன் அவசர சட்டம் கொண்டுவர முடியவில்லை? டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்துக்கு கடந்த பொது தேர்தலில் உறுதியளித்த பாஜ, ஏன் அதனை நிறைவேற்றவில்லை? பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுசரணையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்து கொள்வது ஏன்?

ராம்லீலா மைதானத்தில் பாஜ ஏற்பாட்டில் புதன்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, எனது கேள்விகளுக்கு அப்போது பதில் கூற வேண்டும். மோதி நகரில் சனிக்கிழமை சாலை பிரசாரம் சென்ற என் மீது, திட்டமிட்டு பாஜவால் வன்முறை அரங்கேறி உள்ளது. முதல்வர் தாக்கப்பட வேண்டும் என எந்த நாட்டு பிரதமராவது விருமுவாரா? விளம்பரத்துக்காகவே நான் இப்படி ஒரு தந்திரம் கையாண்டதாக பாஜவினர் சமாளித்து வருகின்றனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories: