வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கேல்

ஜமைக்கா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக அதிரடி வீரர் கிறிஸ் கேல் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 289 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள கிறிஸ் கேல் (39 வயது), இதுவரை 10,151 ரன் (அதிகம் 215, சராசரி 38.16, சதம் 25, அரை சதம் 51) விளாசி உள்ளார். ஐந்தாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள கேல் கூறுகையில், ‘உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப் பெரிய வாய்ப்பு. எங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மக்களுக்காக நிச்சயமாக சிறப்பாக விளையாடுவோம். ஒரு மூத்த வீரராக கேப்டனுக்கும் மற்ற வீரர்களுக்கும் உறுதுணையாக செயல்படும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதற்கேற்ப நடந்துகொள்வேன்’ என்றார். 1975 மற்றும் 1979ல் உலக கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி,  தனது முதல் போட்டியில் மே 31ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: