ஆக்லாந்து: நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.ஆக்லாந்து நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில், முதல் சுற்றில் சீனாவின் வாங் ஸியியுடன் (19 வயது, 212வது ரேங்க்) மோதிய சாய்னா (29 வயது, 9வது ரேங்க்) 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனைக்கு ஈடுகொடுத்து விளையாடிய அவர் 23-21 என்ற கணக்கில் போராடி வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.