ராம ஜெயம் கொலை, கீழக்கரை வழக்குகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை

சென்னை: தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய மண்டல திமுக.வின் மிக வலிமையான தூணாக திகழும் திருச்சி மாவட்ட திமுக செயலர்  நேருவுக்கு வலதுகரமாகவும், அவரது அரசியல் ஏற்றத்துக்கும், அந்த குடும்பத்தினரின் பொருளாதார எழுச்சிக்கும் மூளையாக அவரது தம்பி ராம ஜெயம் திகழ்ந்தவர். இந்நிலையில், நடைப்பயிற்சி சென்ற ராமஜெயத்தை கடந்த 2012-ம் ஆண்டு  மார்ச் 29-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடத்திச் சென்று சில மணி நேரம் கொடூர சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்தனர். இ‌ந்த கொலையா‌ளிகளை ‌பிடி‌க்க முத‌லி‌ல் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை  நடத்தப்பட்டது. ஆனால் த‌னி‌ப்படையா‌ல் வழக்கில் துப்பு துலக்க முடியவில்லை. இதையடுத்து மூன்று மாதங்கள் கழித்து ராம ஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.‌க்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டது. டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் த‌ற்போது 16  தனிப்படைகள் அமைக்கப்பட்டு ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌‌கிறது.

இதுவரை 1400 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ள சிபிசிஐடி அந்த வழக்கில் சிறிதளவும் முன்னேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, ராம ஜெயம் கொலை வழக்கு, கீழக்கரையில் தாக்குதல் நடத்த  தீவிரவாதிகள்  சதி திட்டம் தீட்டிய வழக்குகள் ஆகியவை மாநில சிபிசிஐடியில் இருந்து தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் 10 குழுக்களாக பிரிந்து தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம்,  ராமநாதபுரத்தில் தேசிய ப்புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: