லண்டன் மாரத்தான்: கென்யாவுக்கு 2 தங்கம்

லண்டன் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் கென்யாவின் எலியுட் கிப்சோகே, பிரிஜிட் கோஸ்கெய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர். ஆண்கள் பிரிவில் எலியுட் கிப்சோகே (34 வயது) 2 மணி, 2  நிமிடம், 38 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். எத்தியோப்பிய வீரர்கள் மோசினெட் ஜெரிமியூ, மியூல் வாசிஹுன் வெள்ளி, வெண்கலம் வென்றனர். உள்ளூர் நட்சத்திரம் மோ பாரா 5வதாக வந்து  ஏமாற்றமளித்தார். மகளிர் பிரிவில் 25 வயது இளம் வீராங்கனை பிரிஜிட் கோஸ்கெய் (2:18.20) தங்கப் பதக்கம் வென்றார். சக கென்ய வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான விவியன் செருயோட் 2வது இடமும்,  எத்தியோப்பியாவின் ரோஸா டெரிஜே 3வது இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் 40,000க்கும் அதிகமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: