4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

மும்பை: 4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே ஜன்தன் திட்டத்தின் மூலம் மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்த பிரதமர் மோடி பணத்தை அனில் அம்பானியின் கணக்கில் போட்டுவிட்டார் என்று ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

மராட்டியத்தில் 17 தொகுதிகளுக்கும் உத்திரபிரதேசம், ராஜஸ்தானில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதே போன்று மத்தியபிரதேசம், ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் 3 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் 1 தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 945 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பொதுக்கூட்டத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: