திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட திமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இன்னும் 3 நாட்களில் வேட்பாளர்களை அறிவித்த அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

இதன் காரணமாக 4 தொகுதிகளில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய 29ம் தேதி கடைசி நாளாகும். நேற்றைய தினம், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஊர்வலமாக சென்று திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் 2வது முறையாக திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: