லாலு எப்படி கையெழுத்து போடலாம்?: ஐக்கிய ஜத கேள்வி

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 19  தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது. மீதமுள்ள 20  தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார், பீகார் தலைமை தேர்தல் அதிகாரிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ராஷ்டிரிய  ஜனதா தள தலைவர்  லாலு பிரசாத் யாதவ் ஒரு  குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். ஆயுள் தண்டனை பெற்ற ஒருவர், அரசியல்  நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்ற நிலையில் லாலு பிரசாத் அரசியல்வாதிகளை சந்தித்து ராஞ்சியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் அனுமதி  பெறாமல் அந்த கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் லாலு கையெழுத்திட்டுள்ளார்.

எனவே, அந்த வேட்புனுமக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.  தண்டனை கைதியான அவர் சிறையில்  இருந்தபடி தொடர்ந்து டிவிட்டரிலும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது  தொடர்பாக தேர்தல் ஆணையம் ராஷ்டிரிய ஜனதா தள  தலைவர் லாலு பிரசாத் யாதவிடம்  விசாரணை நடத்த வேண்டும். லாலு ஒன்றும் அரசியல் கைதியல்ல. அவர் தனது  செல்வாக்கை தேர்தல் ஆணையத்தின் மீது திணிக்க  முயற்சிக்கிறார். இது தேர்தல்  நடத்தை விதிமீறலாகும்’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: