மத்தியில் நடப்பது சர்வாதிகாரம் மோடி ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: தேவகவுடா ஆவேசம்

பெங்களூரு: ‘‘விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் பிரதமர் மோடியின் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சிக்கு  மக்களவை தேர்தல் மூலம் மக்கள் முடிவு கட்டுவார்கள்’’ என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா  கூறினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:  மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மத்திய அரசு மக்கள்  பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. ஆனால், தங்கள் மீதுள்ள குறைபாடுகளை மீடியாக்கள் எங்கு  மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுமோ என்ற அச்சத்தி–்ல் பத்திரிகை, ெதாலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்து வாயை  அடைத்துள்ளனர்.மத்திய அரசு வகுத்து செயல்படுத்தும் மேக் இன் இண்டியா, டிஜிட்டில் இண்டியா, மன்கி பாத் போன்ற திட்ட முழக்கமெல்லாம் வசதி  படைத்தவர்களின் நலனுக்காக உள்ளதே தவிர, ஏழைகளின் பொருளாதார ளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.

மோடி அரசின் அட்டகாசம், இன்னல்களை மிகவும் பொறுமையாக கவனித்துவரும் மக்கள், மக்களவை தேர்தலில் சரியான பாடம்  கற்பிக்க உள்ளனர். விவசாயிகள் வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடனை அடைக்க வக்கில்லை. ஆனால், அவர்களை ஏமாற்ற 5  ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் க்ருஷி சன்மான் திட்டம்  செயல்படுத்துவதாக மோடி ஏமாற்றுகிறார். மக்களை வஞ்சித்து வரும் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேர்தலில் மக்கள் முடிவு  கட்டுவார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: