பத்தனம்திட்டா பா.ஜ., வேட்பாளர் சுரேந்திரன் மீது 240 வழக்குகள்

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா பா.ஜ. வேட்பாளர் சுரேந்திரன், தன் மீது 240 வழக்குகள் இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.கேரள மாநிலம்  பத்தனம்திட்டா தொகுதியில் பா.ஜ. மாநில ெபாது செயலாளர் சுரேந்திரன்  போட்டியிடுகிறார். சபரிமலையில்  இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக  நடத்தப்பட்ட பெரும்பாலான போராட்டங்கள் இவரது தலைமையில் நடந்தது.  போலீசார்  சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரை சபரிமலைக்கு  செல்லவும் ராநி நீதிமன்றம் தடை  விதித்தது.இதற்கிடையே இவர்  பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தக்கல் செய்தார். வேட்புமனு  தாக்கல் செய்யும்போது  வேட்பாளர்கள் தங்கள் மீது வழக்குகள் பதிவு  செய்திருந்தால் அதுகுறித்த விவரங்களை குறிப்பிடவேண்டும். இதன்படி  சுரேந்திரன்  வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தன் மீது 60 வழக்குகள்  இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இவருக்கு எதிராக 240  வழக்குகள்  இருப்பதாக கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து  சுரேந்திரனின் வேட்புமனு  தள்ளுபடி  செய்யப்படும் நிலை உருவானது. இதனால்  அவர் வேட்புமனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,  வேட்பாளர்கள் தங்கள் மீது பதிவு ெசய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை  பத்திரிகை மற்றும் டிவிகளில்  விளம்பரம் செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்தது. இதையடுத்து சுரேந்திரன் ஒரு மலையாள பத்திரிகையில் தன்  மீது  பதிவு செய்யப்பட்டுள்ள 240 வழக்குகள் குறித்த விவரங்களை 4 பக்கங்களில் விளம்பரம்  செய்துள்ளார். இதில் ெபரும்பாலும்  சபரிமலை தொடர்பான வழக்குகளாகும். கொலை  முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி  செய்யவிடாமல் தடுத்தல்,  போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது உட்பட பல  பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில்  தான்  இவருக்கு எதிராக மிக அதிகமாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  வழக்குகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது  புகார் இருந்தால் பொதுமக்கள் 500  ரூபாய் பத்திரத்தில் தேர்தல் ஆணையரிடம் பிரமாண வாக்குமூலம் மூலம் மனு  அளிக்கலாம். இதற்கிடையே பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததால் சுரேந்திரனுக்கு மேலும் ஒரு  சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விளம்பரம் செய்ய  குறைந்தது 60 லட்சம் ரூபாய்  செலவு ஏற்படும். மக்களவை தொகுதி வேட்பாளருக்கு அதிகபட்சமாக 75 லட்சம்  மட்டுமே செலவு  செய்ய அனுமதி உள்ளது. இந்த விளம்பரத்திற்கு 60 லட்சம் என்றால் மற்ற  செலவுகளை கணக்கிடும்போது தேர்தல் ஆணையம்  குறிப்பிட்ட செலவை விட அதிகரிக்க  வாய்ப்புள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகார் செய்தால்  சுரேந்தினுக்கு  சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: