காரைக்குடியில் எச்.ராஜா வீட்டு முன் போராட்டம் நடத்த வந்த நந்தினி...தனது தந்தையுடன் கைது

காரைக்குடி: காரைக்குடியில் எச்.ராஜா வீட்டு முன் போராட்டம் நடத்த வந்த நந்தினி, தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டக்கல்லூரி மாணவியாக இருந்து தற்போது வழக்கறிஞராக மாறியுள்ள நந்தினி, தந்தை ஆனந்தனுடன் மோடியை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்ட வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பியபோது, மானாமதுரை அருகே எச்.ராஜா ஆதரவாளர்களான பாஜகவினர் தனது தந்தை ஆனந்தனை தாக்க முயற்சி செய்ததாகவும், இதனை கண்டித்து எச்.ராஜா வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்றும் நந்தினி அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தந்தை ஆனந்தனுடன் காரைக்குடிக்கு வந்த நந்தினி எச்.ராஜாவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதனை தடுத்தி நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் குறித்தும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உள்ளதாக என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெறாத காரணத்தால் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனை போலீசார் கைது செய்து காரைக்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், போலீசார் தம்மை கைது செய்ய முயற்சித்ததால் ஆத்திரமடைந்த நந்தினி, மோடிக்கு எதிரான பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: