லுகானோ: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சாம்சங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்லோவகியா வீராங்கனை போலோனா ஹெர்காக் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (115வது ரேங்க்) மோதிய போலோனா (28 வயது, 89வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்வியாடெக் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.