சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நள்ளிரவு திடீர் தீ விபத்து

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு தலைவர்கள் பெயர்களில் 3 கட்டிடங்கள் உள்ளது. தலா 4 அடுக்குகள் கொண்ட இந்த கட்டிடங்களில் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கலெக்டர் அறை அருகே உள்ள கூட்ட அரங்கில் இருந்து ஜன்னல் வழியாக புகை வருவதை பார்த்த பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே, சித்தூர் தீயணைப்பு படையினர் மற்றும்  அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல பொருட்கள் எரிந்து நாசமாகின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: