புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலாய் லாமாவின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா, கடந்த 8ம் தேதிதான் தர்மசாலா திரும்பினார். இந்நிலையில், அவர் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டார்.