கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இஸ்ரேலில் 5ம் முறையாக பிரதமராகிறார் நெதன்யாகு: 35 இடங்களை பிடித்தார்

ஜெருசலேம்: இஸ்ரேலில் நடைெபற்ற நாடாளுமன்ற தேர்தலில் 35 இடங்களை பிடித்துள்ள நெதன்யாகு, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து 5வது முறையாக பிரதமராக உள்ளார்.  இஸ்ரேல் நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு (69). நேற்று முன்தினம் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், முன்னாள் ராணுவ தளபதியின் ஊதா மற்றும் வெள்ளை கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து, உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 97.4 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அதன் பழமையான வலதுசாரி அரசியல் கூட்டணி இணைந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 65 இடங்களை பெற்று பெரும்பான்மை  அடைந்துள்ளது.

அனைத்து தொகுதிகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்பே உறுதியான நிலவரம் தெரியவரும். வெள்ளிகிழமையே அனைத்து முடிவுகளும் முழுவதுமாக வெளியாகும் என கூறப்படுகிறது. லிகுட் கட்சி 35 இடங்களை பிடித்துள்ள நிலையில் நெதன்யாகுவுக்கு எதிரான பென்னி கான்ட்சும் அதே அளவு தொகுதிகளை கைப்பற்றியுள்ளார். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் நெதன்யாகு பிரதமராவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், தொடர்ந்து 5வது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் பெருமையை அவர் பெறுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: