ஜோலார்பேட்டை: பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சுகன்யா(26), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2ம்தேதி சுகன்யாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்தபோது எதிர்முனையில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுகன்யா தொடர்பை துண்டித்தார். ஆனால் அந்த நபர், சுகன்யாவின் செல்போனுக்கு ஒரு ஆபாச படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
