தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்பியா? என்னை மிரட்டுறாங்க... பாதுகாப்பு கொடுங்க: தேர்தல் அலுவலரிடம் சுயேச்சை மனு

சிவகங்கை மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் சரவணன். இவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். சிவகங்கை மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்னுடைய முகவராக உள்ள சதீஷ்குமார் தேர்தல் வேலையாக சிவகங்கை சென்றுவிட்டு திரும்பும்போது, கொல்லங்குடியில் அவரை வழிமறித்த சிலர், ‘‘நீதான் தொப்பி சின்ன வேட்பாளரின் முகவரா? உன் வேட்பாளரிடம் சொல்லி தொப்பி சின்னத்தில் வாக்கு சேகரிக்க கூடாது என்று சொல்’’ என மிரட்டியுள்ளனர். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: