புரோ கபடி சீசன்-7 வீரர்கள் ஏலம் சித்தார்த் தேசாய்க்கு 1.45 கோடி ஜாக்பாட்

மும்பை: புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசன் ஏலம் தொடங்கியது.  வெளிநாட்டு வீரர்கள் உட்பட இந்த ஏலத்தில்  457 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.புரோ கபடி போட்டித் தொடர் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் உட்பட மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆண்டு நடைபெற  உள்ள 7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்  மும்பையில் நேற்று தொடங்கியது. புனே அணியை தவிர மற்ற அணிகள் ஏற்கனவே தங்கள் அணிக்காக 27 வீரர்களை தக்க வைத்துள்ளன. குஜராத், ஜெய்பூர்,  பெங்களூர், உபி, மும்பை, பெங்கால் ஆகிய அணிகள் இளம் அறிமுக வீரர்கள் 6 பேரை தக்க  வைத்துள்ளன. ஏலத்தில் பங்கேற்க 442  பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில்  53 பேர் ஈரான், தென் கொரியா, கென்யா உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள்.

இந்த வீரர்கள்  அனுபவம், திறமைக்கு ஏற்ப ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆரம்ப விலை ஏ பிரிவுவில் உள்ள வீரர்களுக்கு ₹30 லட்சம், பி பிரிவு வீரர்களுக்கு ₹12 லட்சம், சி பிரிவுக்கு ₹10 லட்சம், டி பிரிவுக்கு  ₹6 லட்சம், இளம் அறிமுக வீரர்களுக்கு ₹7.26 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த சீசனில் அதிகபட்ச  ஆரம்ப விலை ₹20 லட்சமாகவும், குறைந்தபட்ச ஆரம்ப விலை ₹5 லட்சமாகவும் இருந்தது.கடந்த சீசனில் அறிமுகமான மும்பை வீரர்  சித்தார்த் தேசாயை (ஏ பிரிவு) ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் ₹1.45 கோடிக்கு ஏலம் எடுத்தது. இரண்டாவது நாளாக இன்றும் ஏலம்  தொடர்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: