ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு ஓட்டு போட அனுமதியில்லை: ஜார்க்கண்ட் தேர்தல் அதிகாரிகள் தகவல்

பீகார்: பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டபடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாரும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது. அதனால், தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவால் வாக்களிக்க முடியாது என்று கூறப்பட்டு வந்தது. அதனை, ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுைகயில், ‘தேர்தல் சட்ட விதிமுறை மற்றும் சிறை கைதிகளுக்கான விதிமுறைபடி சிறையில்  அடைக்கப்பட்டுள்ள லாலு, தேர்தலில் வாக்களிக்க முடியாது’ என்றனர்.

இதுகுறித்து, லாலுவின் மகனும் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுைகயில், ‘‘உடல் நலக் குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் லாலு பிரசாத் யாதவைச் சந்திக்க அதிகாரிகள்  அனுமதி மறுக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் எனது தந்தையைப் பார்ப்பதற்காக நான் சனிக்கிழமை (நேற்று முன்தினம்) முதல் காத்திருக்கிறேன். எனினும், ஜார்க்கண்ட் மாநில ஆளும் பாஜ சர்வாதிகார  அரசு, தந்தையை பார்க்க விடாமல் தடுத்து வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: