இலங்கை வீரர் இடை நீக்கம்

துபாய்: கிரிக்கெட் விளையாட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டு காரணமாக இலங்கை வீரர் தில்ஹரா லோகுஹேட்டிகே  ஐசிசியால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற டி10 கிரிக்கெட் தொடரில் முறைகேடு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்  முறைகேட்டில் ஈடுபட்டது உட்பட 3 குற்றச்சாட்டுகள்  தில்ஹரா(38) மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த  குற்றச்சாட்டு தொடர்பாக  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) விசாரித்து வருகிறது.  மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க தில்ஹராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.  குற்றச்சாட்டு ஒன்று உறுதியான நிலையில் தில்ஹராவை இடை நீக்கம் செய்து ஐசிசி நேற்று உத்தரவிட்டது.

எஞ்சிய குற்றச்சாட்டுகள் விசாரணை  செய்த பிறகு முழு நடவடிக்கை இருக்கும் என்றும் ஐசிசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை அணிக்காக  தில்ஹரா  சர்வதேச அளவில்  9 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இலங்கை கிரிக்கெட்டில் நடைப்பெற்ற ஊழல், ஆவணங்களை அழித்தது தொடர்பாக  பிப்ரவரி மாதம்  சனத் ஜெயசூரியாவுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்தது. அதேபோல்  இன்னொரு இலங்கை  வீரர் நுவான் ஜோய்சாவும் கடந்த அக்டோபரில் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: