டி.ஆர்.பாலு வாக்குசேகரிப்பு

ஆலந்தூர்: ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று  ஆலந்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாவட்ட செயலாளர்கள் மா.சுப்ரமணியன் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நாஞ்சில்பிரசாத் ஆகியோரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். ஆலந்தூர் எம்.கே.சாலை, சவுரிதெரு கற்பகவிநாயகர் கோயில் தெரு, ராஜாதெரு காவலர் குடியிருப்பு போன்ற பகுதிகளில்  வாக்கு சேகரித்த அவருக்கு ஏராளமானோர் சால்வை, மாலை அணிவித்தும்  பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

வாக்குசேகரிப்பில் திமுக பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம், கோல்டுபிரகாஷ், கீதாஆனந்தன், கிரிஜாபெருமாள், ஆ.துரைவேலு, இரா.பாஸ்கரன், எஸ்.ரத்தினம் சீனிவாசன், முரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், நடராஜ், ஸ்ரீகாந்த், ஜெயபால், காங்கிரஸ் சார்பாக ரவிக்குமார் நேருரோஜா, கஜபதி, மதிமுக மாவட்டசெயலாளர் ப.சுப்ரமணி, பகுதி செயலாளர் சின்னவன் கம்யூனிஸ்ட் அரிகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் சீராளன் உள்பட கூட்டணி கட்சியினர்  வாக்குசேகரிப்பில் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: