பத்த வைச்சது பரட்ட தான்..... ரஜினி மீது அமைச்சர் பாய்ச்சல்

கர்நாடக மாநிலம், மண்டியா தொகுதியில் மறைந்த நடிகரும் அமைச்சருமான அம்பரீஷின் மனைவியான நடிகை சுமலதாவுக்கு காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில் அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்ப நண்பர். மண்டியாவில் மஜத வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மஜத.வுக்கு 8 எம்எல்ஏ.க்கள் இருக்கின்றனர். இவர்கள் அமைச்சர் புட்டராஜூ தலைமையில் நிகில் கவுடாவின் வெற்றிக்காக பம்பரமாக வேலை செய்கின்றனர். இந்நிலையில்தான், கடந்த வியாழன்,  வெள்ளிக்கிழமைகளில் புட்டராஜூ வீட்டில் அதிரடியாக வருமான வரி சோதனை நடந்தது. இது திட்டமிட்ட சதி என்கிறார் புட்டராஜூ. அவர் கூறுகையில், ‘‘எனது வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததில் நடிகர் ரஜினி காந்த்துக்கும் தொடர்புள்ளது.

ரஜினியின் உதவியுடன் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை சுமலதா தொடர்பு கொண்டு எனது வீட்டில் ரெய்டு நடத்த கேட்டுக் கொண்டுள்ளார். என் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு முன்தினம் சுமலதா பிரசாரத்தில் பேசும்போது, தவறு செய்யும் மஜத தலைவர்கள் பிடிபடுவார்கள் என்றார். அந்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. நிகில் கவுடா வெற்றிக்கு உழைப்பதால் என்னை பழிவாங்க, இந்த ரெய்டை சுமலதா நடத்தியுள்ளார். அவர்கள் தனியார் ஓட்டலில் அமர்ந்து வாக்காளர்களுக்கு பணம் தருகின்றனர். அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். எனது வீட்டில் ரூ.30 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் எடுத்தனர். அதையும் திருப்பி கொடுத்து விட்டனர்.

அம்பரீசுக்கு மரியாதை தராமல் நாடாளுமன்றத்தில் பாஜ புறக்கணித்தது. அப்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா தலையிட்ட பிறகுதான், அம்பரீசுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை சுமலதா மறந்து விடக் கூடாது’’ என்றார்.

ஆணையம் நோட்டீஸ்

நிகில் கவுடாவின் வேட்புமனுவில் இருந்த தவறை தேர்தல் அதிகாரிகள் முதல்வர் குமாரசாமியின் வீட்டுக்கே சென்று திருத்தம் செய்ததாக நடிகை சுமலதா சமீபத்தில் குற்றம் சாட்டினார். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய விளக்கம் அளிக்காவிட்டால் சட்டவிதி 189ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: