சத்தியமங்கலம் : திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்திற்கு இடையே பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.