கர்தார்பூர் வழித்தட குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் : பாக். தூதரிடம் இந்தியா கண்டனம்

புதுடெல்லி: கர்தார்பூர் வழித்தட குழுவிற்காக அமைக்கப்பட்ட பாகிஸ்தானின் குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடம் பெற்றதற்கு,  அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குருநானக் ஜெயந்தியன்று  பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் எல்லை தாண்டி குருநானக் நினைவிடத்துக்கு சென்று வாழிபாடு நடத்துவார்கள்.  இந்நிலையில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தேரா கோயிலில் இருந்து குருத்வாரா தர்பார் சாகிப்பை இணைக்கும் வகையில் கர்தார்பூர் சிறப்பு வழித்தடத்தை அமைக்க இந்தியாபாகிஸ்தான் அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக சமீபத்தில் அட்டாரியில் இந்தியாபாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற உள்ளது. 2வது கட்ட பேச்சுவார்த்தை வரும் 2ம் தேதி வாகா எல்லையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதல் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இதனால், மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்தார்பூர் நடைபாதை தொடர்பான அடுத்த கூட்டம், பாகிஸ்தானின் பதிலை பெற்ற பிறகு தகுந்த நேரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்

படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சையத் ஹைதர் சாவை நேற்று நேரில் அழைத்த வெளியுறவு துறை அமைச்சகம், கார்தார்பூர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் குழுவில் ஏராளமான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடம்பெற்றிருப்பது கவலை தருவதாகவும் கண்டனம் தெரிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: