மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரட்டன், பிரான்ஸ் உதவியுடன் ஐ.நா-விற்கு அமெரிக்கா வரைவு தீர்மானம்

வாஷிங்டன்: கருப்புப் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சேர்க்க ஐ.நா-விற்கு அமெரிக்கா வரைவு தீர்மானம் அனுப்பியுள்ளது. ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர சம்பவத்தில் 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி எதிர்கொண்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ தடை விதிக்கவும், மசூத் அசார் சர்வதேச பயணம் மேற்கொள்ள தடை விதிக்கவும், அவனது சொத்துக்களை முடக்க 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்த 3 நாடுகளும் கோரிக்கை விடுத்தது. இதற்கு சீனா தொடர்ந்து முட்டுகட்டை போட்டு வருகிவது. இந்நிலையில், பிரட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: