திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் (75). பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த இவர் 1981-84ல் திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்தார். மதிமுக ெதாடங்கியபோது, அக்கட்சிக்கு சென்றார். பின்னர் திமுகவில் இணைந்து 2006ல் முசிறி தொகுதியில் வெற்றி பெற்று வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்வராஜூக்கு சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக செல்வராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.