நாளை எம்பிஏ தேர்வு முடிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி எம்பிஏ செமஸ்டர் தேர்வு முடிவு நாளை வெளியாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைகழகத்தின் தொலை தூரக்கல்வி பிரிவின் கீழ் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த எம்பிஏ தேர்வு முடிவு www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் மார்ச் 25ம் தேதி(நாளை) மாலை வெளியாகிறது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 1,000 கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதியில்லாத மாணவர்கள் 300 செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: