மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு தேர்வில் செல்போனில் வினாத்தாள் லீக்

தானே:  மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களுக்கு வினாத்தாள் மொபைலில் வெளியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் கால்ஹர் தேர்வு மையம் அருகே மாணவர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் தேர்வுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது சில மாணவிகள் ஆட்டோவில் இருந்தபடி செல்போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கல்வி வாரிய அதிகாரி மாணவிகளின் இந்த செயலால் சந்தேகமடைந்தார்.

இதனையடுத்து அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் சென்று விசாரித்தார். மேலும் மாணவிகள் வைத்திருந்த செல்போனை வாங்கி சோதனை செய்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அன்று நடக்க இருந்த வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாட தேர்வுக்கான அரசு வினாத்தாள் அவர்களது மொபைலில் வந்திருந்தது. மாணவிகள் செல்போனில் உள்ள மெசேஞ்ஜிங் அப்ளிகேஷன் மூலமாக வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திற்கான அரசு வினாத்தாள் அனுப்பப்பட்டு இருந்தது.  இதனால் அதிகாரி  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நார்போலி காவல் நிலையத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: