ஒப்பந்தப்படி உலககோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன்

துபாய்: ஒப்பந்தப்படி உலககோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார். 2019ம் ஆண்டிற்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்தது.

அது தொடர்பான விவாதங்கள் பெரிய அளவில் நடந்த நிலையில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ) கூறியுள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் ஜூன் 16 அன்று நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டி நடந்தே தீரும் என்ற தொனியில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டுள்ளனர்.

2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒருவேளை இந்த உடன்படிக்கைபடி ஒரு நாடு நடந்துகொள்ளவில்லை என்றால், எதிரணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்திய வீரர்கள் சமீபத்தில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது. நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: