டெல்லி: ஜெட் ஏர்வேஸ்-ன் ஒரு சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள் குறைகளை வெளிப்படுத்தி வருகின்றன கடனை திருப்பி தராதது, குத்தகைக் கட்டணம் செலுத்தாதது, ஊழியர்களுக்கு சம்பள நிலுவை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓர் இருதினங்களாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது விமானங்களில் பாதியை இயக்காததால் அடுத்து அடுத்து சில ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.