மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல்: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.திமுக சார்பில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பாரிக்கர் எளிமையின் சின்னமாக வாழ்ந்த முதல்வர் என்பதை அவர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் ராமநாதபுரம் அப்துல் கலாம் நினைவு மண்டபம் அமைக்க ஆய்வு செய்ய பயணித்தபோது அறிந்தேன். அவருடைய எளிமையான நடை, உடை செயல்பாடுகள் என்னை பிரமிக்கவைத்தது. அன்னாரது இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கும்,தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: