ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் போது அமைச்சர்களையே சிறைபிடித்தவர் மோடி : ப.சிதம்பரம் தடாலடி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: அனைத்து முடிவுகளையும் ஒரே தலைவர் எடுக்கிறார். பண மதிப்பு இழப்பு முடிவு எப்படி எடுக்கப்பட்டது? அமைச்சரவையா முடிவு செய்தது?. நவம்பர் மாதம் 8ம் தேதி ஏறத்தாழ ஐந்தரை, ஆறு மணிக்கு அமைச்சர் எல்லாரையும் அழைத்து அந்த அறையில் உட்காருங்க என்று சொன்னார்கள். அமைச்சர்கள் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள். பிரதமர் வருகிறார். அமைச்சரவை குறிப்பு கிடையாது. ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிடுகிறார். ஒரு மணி நேரம், ஒன்னரை மணி நேரம் சிறை கைதிகளாக வைக்கப்பட்டு தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது. ₹500 நோட்டு செல்லாது. அதிர்ச்சியடைந்து போகிறார்கள். இப்போது ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் ஒட்டுக்காக ₹6000 தருகிறார்கள். ஒரு குடும்பத்துல 5 பேர். அப்படினா ஒரு நாளைக்கு மூனரை ரூபாய். அரைக்கப் டீ தான் குடிக்கலாம். ஒரு கப் வாங்க முடியாது.. ஒன்பை டூ இருக்குல்ல. ஒரு டீ வாங்கி இரண்டு பேர் சாப்பிடனும். மோடி என்பது மோசடி என்று தெரிந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: