நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை:: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதானார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தண்டபாணி, ‘‘வழக்கு விசாரிக்கப்பட்டு சிபிசிஐடி தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, நிர்மலாதேவி இனிமேலும் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் சாட்சியங்களை மிரட்டவோ, கலைக்கவோ வாய்ப்பில்லை. அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.  விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கோ தனிநபருக்கோ பேட்டி அளிக்கக்கூடாது’’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

ஏற்கனவே நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு, நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக நிர்மலாதேவி நேரில் ஆஜரானார். நீதிபதிகளின் தனி அறையில் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரியிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: