108வது நினைவுநாளை முன்னிட்டு பென்னிகுக் மணிமண்டபத்தில் விவசாயிகள், மக்கள் அஞ்சலி

கூடலூர்:  கர்னல் பென்னிகுக்கின் 108வது நினைவுநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முல்லை பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 108வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணி மண்டபத்துக்கு ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மறந்து போன பொதுப்பணித்துறை : பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில், அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளன்று பொதுப்பணித்துறை சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்வர். கடந்த மாதம் பென்னிகுக் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். நேற்று பென்னிகுக்கின் 108வது நினைவு நாளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருவர் கூட அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என்பது விவசாயிகளை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: