போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம்.: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

சென்னை: போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ தடுப்பூசி போடப்படும் என சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும் கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார். அதனையடுத்து 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 2-ம் கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது என்று அவர் கூறினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் அதிரிகரித்துள்ளது. 2300 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் மத்திய அரசு பணிகளை தொடங்கியது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். அதனையடுத்து குறுகிய நாட்கள் இடைவெளியில் இந்தியா கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, பெரியமேடு மருந்துசேமிப்பு கிடங்கையும் பார்வையிடுகிறார். மேலும் செங்கல்பட்டிலுள்ள தடுப்பு மருந்து மையம், ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம்.: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் appeared first on Dinakaran.

Related Stories: