தொடர்ந்து 3வது ஆண்டாக நாட்டின் மிக சுத்தமான நகரமாக இந்தூர் தேர்வு

புதுடெல்லி: நாட்டின் மிக சுத்தமான நகரகத்துக்கான விருதை இந்தூர்  தொடர்ந்து 3வது ஆண்டாக பெற்றுள்ளது.  நாட்டின் மிக சுத்தமான நகரங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்ட மத்திய அரசு, அது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3வது முறையாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் மிக சுத்தமான முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது மிக சுத்தமான நகரமாக சட்டீஸ்கரின் அம்பிகாபூரும், 3வது இடத்தை கர்நாடகாவின் மைசூர் நகரும் பெற்றுள்ளன. இதேபோல்,மிக சுத்தமான சிறிய நகரத்துக்கான விருதை டெல்லி நகராட்சி கவுன்சில் பகுதி பெற்றது. சுத்தமான பெரிய நகரத்துக்கான விருதை குஜராத்தின் அகமதாபாத்தும், சுத்தமான வேகமாக வளரும் பெரிய நகரத்துக்கான விருதை சட்டீஸ்கரின் ராய்ப்பூரும் பெற்றுள்ளது. சுத்தமான நடுத்தர நகரத்துக்கான விருதை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் பெற்றுள்ளது.

சிறந்த கங்கை நகரமாக உத்தரகாண்டின் கவுசார் நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு விருது வழங்கும் விழா, மத்திய ஊரக விவகார அமைச்சகம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. ‘சுவாஜ் சர்வேக்‌ஷன் 2019’ என்ற பெயரிலான இந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மகாத்மா காந்தி சிலையை நினைவுப்பரிசாக கொண்ட இந்த விருதுகளை தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் சார்பில் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘சுத்தம் தொடர்பான பாடத்தை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டியது மிக அவசியம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: