ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிரடி கருப்பு பட்டியலில் பின்லேடன் மகன்: குடியுரிமையை ரத்து செய்தது சவுதி அரசு

ஐ.நா. மார்ச் 3: ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐநா பாதுகாப்பு கவுன்சில் தனது தடை பட்டியலில் அதிரடியாக சேர்த்துள்ளது.சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின்லேடன், அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருந்தான். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில்  ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் அபோதாபாத்தில் உள்ள  பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கப் படை அதிரடியாக தாக்குதல் நடத்தி சுட்டுக்  கொன்றது. பின்னர், அல் கொய்தா அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி தலைவரானான்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இன்டர்நெட் மூலம் ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஒசாமா பின்ேலடனின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்படி தனது இயக்க  தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டு வருகிறான். இதனைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வியாழக்கிழமை ஹம்சா பின்லேடனை தனது கருப்பு பட்டியலில் சேர்த்தது. அமெரிக்கா அவனை பற்றிய தகவல்  தெரிவிப்போருக்கு ₹ 7 கோடி பரிசளிக்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவும் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை கடந்த நவம்பர் முதல் ரத்து செய்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: