சென்னை: மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை படத்தின் ஆலோசகராக இருந்தவர் ஏர் மார்ஷல் வர்தமான். இவர், பாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் தந்தை.காற்று வெளியிடை படத்தில் விமானப்படை விமானியாக கார்த்தி நடித்திருந்தார். இந்த வேடத்துக்காகவும் படத்தின் சில முக்கிய காட்சிகளுக்காகவும் ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் வர்தமான் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த படத்தில் கார்த்தி கடத்தப்படுவார். அதேபோன்ற சம்பவம் படத்துக்கு பயிற்சி கொடுத்த வர்தமானின் குடும்பத்தில் அரங்கேறியிருப்பது அவர்கள் யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். காற்று வெளியிடை படத்தின் நாயகன் கார்த்தி கார்கில் போரின்போது தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் போய் சிக்கிக்கொள்வார்.