சிறை பிடித்த விமானியை உடனே விடுவிக்க வேண்டும்

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், அங்குள்ள  பொதுமக்களால் கடுமையாக தாக்கப்படும் வீடியோ நேற்று வெளியானது. அபிநந்தனை ரத்தம் சொட்ட சொட்ட பாகிஸ்தான் ராணுவம் அழைத்துச் சென்றது. இதற்கு இந்தியா  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் பொறுப்பு தூதர் சையத் ைஹதர் ஷாவுக்கு வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தது. அவரிடம், ‘சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவரது பாதுகாப்பை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த  விமானியை மோசமாக தாக்கியது ஜெனீவா மாநாடு மற்றும் சர்வதேச சட்ட விதிகளை  மீறும் செயலாகும். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது’ என  கூறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: