அர்பித் ஓட்டல் தீ விபத்து மேலும் 75 ஓட்டல்களின் சுகாதார உரிமம் ரத்து

புதுடெல்லி: பதினேழு பேர் உயிரிழந்த அர்பித் ஓட்டல் தீவிபத்தை அடுத்து, கரோல் பாக்கில் விதிகளை மீறிய இயங்கிய ஓட்டல்களின் தீ தடுப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் 75 ஓட்டல்களின் சுகாதார உரிமத்தை ரத்து செய்து வடக்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட கரோல் பாக் ஓட்டல், கடந்த 12ம் தேதி அதிகாலை தீவிபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் கரோல் பாக்கில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்த மாநகராட்சி, சுகாதாரமில்லாமல் இயங்கி வந்த 30 ஓட்டல்களின் சுகாதார உரிமத்தை ரத்து செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், மேலும் 75 ஓட்டல்களின் சுகாதார உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஓட்டல்களுக்கான குடிநீர் மற்றும் மின் இணைப்பை நிறுத்தி கொள்ளும்படி கடிதம் எழுதியுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேயர் ஆதேஷ் குப்தா கூறுகையில், ‘மாநகராட்சி சார்பில் சுகாதார விதி மீறிய இயங்கிய 105 ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அர்பித் ஓட்டல் தீவிபத்துக்கும் விதிமீறல்கள் தான் முக்கிய காரணம். ஓட்டலின் 2வது தளத்திலிருந்து குளிரூட்டப்பட்ட அறையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. எங்களது அறிக்கையை சமர்பித்து விட்டோம். இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாஜிஸ்திரேட்டும் தனது அறிக்கையை சமர்பிக்க உள்ளார்’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: