பாதை வசதி இல்லாத, அபாயகரமான வனப்பகுதி திருமலை குமாரதாரா தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

திருமலை: திருப்பதி அடுத்த திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு வாயு திசையில்  குமாரதாரா தீர்த்தம் உள்ளது.  இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று குமாரதாரா முக்கோடியில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இங்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. மிகவும் அபாயகரமான இங்கு ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியன்று பக்தர்கள் சென்று புனித நீராடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டுமாசி  மாத பவுர்ணமியொட்டி நேற்று பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லக்கூடிய வனப்பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அருகே பக்தர்களுக்கு குடிநீர், அன்னப் பிரசாதம் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.

திருமலையில் பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இவற்றில் 12 தீர்த்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் குமாரதாரா தீர்த்தமும் ஒன்று. மாசி மாத பவுர்ணமி அன்று இந்த தீர்த்தத்தில் புனித நீராடினால்  நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கரடுமுரடான மலைப்பாதையில் பக்தர்கள் இந்த யாத்திரையை நேற்று மேற்கொண்டனர். மலையில் ஏற முடியாத இடத்தில் இரும்பிலான ஏணியை தேவஸ்தானம் அமைத்திருந்தது. இதில் பக்தர்கள் ஏறிச்சென்றனர். வனப்பகுதியில் செல்லும் மார்க்கத்தில்  இயற்கை அழகை ரசித்தபடி பக்தர்கள் நடந்து சென்று புனித நீராடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: