உடுமலை, அமராவதி வனத்தில் வறட்சி : வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி துவக்கம்

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சமார் 440 சதுர கிமீ., பரப்பளவு கொண்டவை. இங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது, பனிக்காலம் முடிந்து கோடை காலம் துவங்க உள்ளது. ஆனால் முன்னதாக வனத்தில் கடும் வெயில் கொளுத்துவதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர கிடைக்கும் வகையில், ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றுவது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டும் தண்ணீர் ஊற்றும் பணி துவங்கி உள்ளது. லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று, தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர். இதன் மூலம் விலங்குகளின் தாகம் தீர்க்க முடியும், நீருக்காக விளைநிலங்களுக்கு வருவதும் தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: