ரூ10 லட்சம் திருட்டு போனதால் உபி பேரவையில் எம்எல்ஏ கதறல்: தற்கொலை செய்யப்போவதாக விரக்தி

லக்னோ: ரூ10 லட்சம் திருடுபோனதால், மனமுடைந்த சமாஜ்வாடி எம்எல்ஏ, தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை என கதறிய விவகாரம் உபி சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உ.பி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று வித்தியாசமான சம்பவம் அரங்கேறியது. பூஜ்ய நேரத்தில், அசம்கர் மாவட்டம் மேநகர் தொகுதி சமாஜ்வாடி எம்எல்ஏ கல்ப்நாத் பஸ்வான் எழுந்து பேசினார். கண்ணீர் மல்க அவர் பேசுகையில், ‘‘அசம்கரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது எனது ரூ10 லட்சம் பணம் திருடு போய்விட்டது. இதைப் பற்றி போலீசில் புகார் கொடுத்த பிறகும் அவர்கள் வழக்குப் பதிவு செய்யவில்லை.

Advertising
Advertising

நான் மிகவும் ஏழை. இங்கு கூட எனக்கு நீதி கிடைக்காவிட்டால் நான் வேறெங்கு போவது?. என் பணம் திரும்ப கிடைக்காவிட்டால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என புலம்பினார். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, ‘‘இதுதொடர்பாக அறிக்கை பெற்று, நீதி நிலைநாட்டப்படும். கல்ப்நாத் விரும்பினால், உடனடியாக வழக்கு பதிந்து விசாரணை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார். மேலும், மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: