கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக கலக்கும் அரசு தொடக்கப்பள்ளி

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ராஜாப்பட்டியில் தனியார் பள்ளி களுக்கு இணையாக கல்வியில் கலக்கும் கல்வி சாலையாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிட த்தில் பள்ளியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு தொடுதிரை உயர் தொழில் நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 201013 கல்வி புரவலர்கள் வங்கி வட்டி தொகை, 201819 கல்வி ஆண்டின் மாண வர்களின் பெற்றோர்கள் மற்றும் உயர் தொடுதிரை தொழில்நுட்ப வகுப்பறை 50 பேர் கொடுத்த நன்கொடை மற்றும் கல்வி புரவலாகள் 53 பேர் கொடுத்த நிதி பங்களிப்புடன் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடை பெற்று வருகிறது.

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முதல் பள்ளியாக செயல்பட்டு வருகி றது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தொடுதிரையில் பாடங்களை பயிற்று வருகின்றனர். பலகையில் பாடங்கள் நடத்துவது காட்டிலும் தொடு திரையில் பாடங்கள் நடத்துவது மிகவும் சுலபமாக உள்ளது என அப்பள்ளி தலைமையா சிரியர்கள் சேகர் மற்றும் உதவி ஆசிரியர் சின்னராஜா தெரிவித்தனர். அரசு பள்ளி என்றால் சுமாராகதான் பாடங்கள் நடத்துவர்கள், அதுவும் கடமை க்கு ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என்ற வார்த்தை அப்பாற்பட்டு இப்பள்ளி யில் மாணவ, மாணவிகள் அதிகளவில் பாடம் கற்க ஆசிரியர்கள் பாடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது மாணவர்கள் 19 பேரும், மாணவிகள் 23பேரும் பயின்று வருகின்றனர். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் இப்பள்ளியில் உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ள தங்களது குழந்தைகளை சேர்த்து பயன் பெற ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: