ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்த மங்கை இந்திய விமானப்படையில் முதல் பெண் இன்ஜினியர்: வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தார்

பெங்களூரு: இந்திய விமானப்படையின் முதல் பெண் இன்ஜினியர் என்ற பெருமையை பெற்ற  ஹீனா, வெற்றிகரமாக பயிற்சியை முடித்து ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்த  மங்கை என்று பாராட்டு பெற்றுள்ளார். சைக்கிள் முதல் விமானம் வரை  அனைத்து வேலைகளிலும் தற்போது பெண்களும் சாதனை நிகழ்த்தி வருகிறார்கள்.  விண்வெளி பயணத்திலும் ஆண்களுடன் போட்டி போடும் அளவுக்கு பெண்கள்  பலதுறைகளில் இன்று முத்திரை பதித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய விமானப்படையின் முதல் பெண் இன்ஜினியர்  என்ற பெருமையை ஹீனா ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். சண்டிகார்  நகரை சேர்ந்தவரான ஹீனா, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம்  பெற்றவர். சிறு வயதிலேயே விமான இன்ஜினியராக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.  அதற்கான முயற்சியில் ஹீனா தீவிரமாக ஈடுபட்டார். இதையடுத்து தனது கனவை  நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு இந்திய விமானப்படையில்  சேர்ந்தார்.

பெங்களூரு எலகங்காவில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி  நிலையத்தில் சேர்ந்து ஹெலிகாப்டர் பிரிவில் பயிற்சி பெற்றார். அங்குள்ள  இன்ஜினியரிங் பிரிவில் ஹெலிகாப்டர்களை பழுதுபார்க்க கற்றுக்கொண்டார். கடுமையான  பயிற்சிகளை மேற்கொண்டதை தொடர்ந்து சிறந்த பெண் இன்ஜினியர்  என்று அனைவராலும்  பாராட்டப்பட்டார். காரணம் விமானப்படை விமானத்தை கையாள்வதற்கான அத்தனை  திறமைகளும், கண்காணிக்கும் நுணுக்கமும் அவரிடம் இருந்தன. சுமார் 6  மாத காலம் பயிற்சி பெற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமையுடன் தனது பயிற்சியை  வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதையடுத்து, பிளைட் லெப்டினன்ட் ஆக  பொறுப்பேற்றார். முன்னதாக அவர் துப்பாக்கி சுடும் குழுவின் தலைவராக  இருந்தார். தனது சாதனை பயணம் குறித்து ஹீனா கூறுகையில், ‘‘எனது நீண்டநாள் கனவு நனவாகி உள்ளது’’ என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: