மேலூர் அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்: அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்கும் நிகழ்வு!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலைப்பட்டியில் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சருகுவலைப்பட்டி கிராமத்தில் உள்ள பூதகருப்புக் கோவிலுக்கு சொந்தமான கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சருகுவலைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமமக்கள் கண்மாய்க்கு சென்று மீன் பிடித்தனர்.

குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த திருவிழாவில் அயிரை, கட்லா உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர். பூதகருப்பு கோவிலில் வேண்டுதல் வைத்துக் கொள்ளும் பக்தர்கள் மீன்குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விட்டு செல்வார்கள். அப்படி விடப்படும் மீன்களை மாசி மாதம் தொடக்கத்தில் அனைத்து மக்களும் வந்து பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: