தேசிய செயலாளர் முரளிதர் ராவ் பேட்டி தமிழகத்தில் பா.ஜ. கூட்டணி விரைவில் அறிவிப்பு வரும்

கோவை:பிரதமர் மோடியின் ‘பாரத் கே மங்கி பாத், மோடி கே சாத்’ நிகழ்ச்சி கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கோவை, திருப்பூர், கரூர், ஆகிய  மாவட்டங்களை சார்ந்த ஜவுளித் துறையினரின் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதன்பின் நிருபர்களிடம் முரளிதர் ராவ்  கூறியதாவது:பா.ஜ.க. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொலைநோக்கு பார்வையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவுள்ளது. இதற்காக பா.ஜ. தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த  சந்திப்பின் போது அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் பதிவு செய்யப்படும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ. கூட்டணி அமைத்துதான் போட்டியிடும். தேர்தல் கூட்டணிக்கான பேச்சு சுமூகமாக போய் கொண்டிருக்கிறது, கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.மக்களவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியது குறித்து கருத்து சொல்ல முடியாது. அதிமுக தலைமையே இன்னும் இதுகுறித்து அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.இவ்வாறு முரளிதர்ராவ் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: