குடோனில் பதுக்கிவைத்திருந்த பல லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: மாணவன் கைது

திருவொற்றியூர்: குடோனில் பதுக்கிய பல லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சட்டக்கல்லூரி மாணவனை  கைது செய்தனர்.திருவொற்றியூர் போலீசார் நேற்று முன்தினம் திருவொற்றியூர் காலடிப்பேட்டை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆட்டோவில் சோதனை நடத்தியபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, தண்டையார்பேட்டையை சேர்ந்த அனீஷ் (28) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சட்டக்  கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் ஆந்திராவில் இருந்து குட்கா வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கல்லூரி  மாணவர்கள் உள்பட பலருக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வைத்திருந்த 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் விச்சூர் பகுதி குடோனில் மூட்டை,  மூட்டையாக பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, மணலி புதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குட்கா விற்பனை கும்பலுக்கும், அனீசுக்கும் தொடர்பு உள்ளதா, இவருடன் சேர்ந்து யார், யார் குட்கா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூந்தமல்லி: வீட்டில் மாவா தயாரித்து  விற்று வந்த குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்த சுஜித் (32), கணேசன் (51), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 400 பாக்கெட்டுகள் மாவா போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: