சிட்னியில் உள்ள டார்லிங் துறைமுகத்தில் 764 மக்கள் ஒன்றாக சாப்பிட்டு கின்னஸ் சாதனை!

பெய்ஜிங் : சிட்னியில் உள்ள டார்லிங் துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக சாப்பிட்டு உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். சீனாவில் கடந்த 5ம் தேதி புத்தாண்டான  பன்றி ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சீனாவில் உள்ள நகரங்கள் முழுவதும் மின்னொளி மற்றும் வாணவேடிக்கையால் ஜொலித்து விழாக்கோலம் பூண்டது. மேலும் இந்த புத்தாண்டினை வசந்தகால விழா எனும் பெயரில் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், வழிபாடுகள், பல்வேறு கொண்டங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சீன புத்தாண்டின் முதல் நாளை கொண்டாடும் வகையில் சிட்னியில் உள்ள டார்லிங் என்ற துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு உண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். டம்ப்ளிங் எனப்படும் பாரம்பரிய உணவை குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் சாப்பிட்டனர். இதற்காக சுமார் 4,000 டம்ப்ளிங்களை மக்கள் அவர்கள் கைப்படவே செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை பதிவாளர்கள் இதனை கண்காணித்தனர். 100 மேசைகளுக்கு 10 பேர் என்ற கணக்கில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிட்டதை தொடர்ந்து பார்வையிட்டனர்.

பின்னர் சிட்னி கவுன்சிலர் ஜெஸ் ஸ்கில்லியின் கின்னர் விருதை பெற்றுக்கொண்டார். அவருடன் அமண்டா கெல்லர் மற்றும் பிரெண்டன் ஜோன்ஸ் அகியோர் உடன் இருந்தனர். இதுவரை 2013ம் ஆண்டு மெல்போர்னில் 750 மக்கள் ஒன்றாக சாப்பிட்டதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் முந்தைய சாதனையை சிட்னி மக்கள் முறியடித்துள்ளனர். மேலும் இந்த வசந்த கால விழாவானது பிப்ரவரி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. வார இறுதியில் டிராகன் படகுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியைக்காண பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். மேலும் பிப்., 8 மற்றும் 9ம் தேதிகளில் லூனா பார்கில் பல்வேறு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: