நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு ஜே.சி.பி.இயந்திரம் கொண்டு பூக்களை கொட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.  பிரசாரத்தின் போது வேட்பாளர் பிரபாகர்ராஜா பேசுகையில்,”அம்பேத்கர் காலனியில் வீடு கட்டித்தரப்படும். பாரதிதாசன் காலனி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும். பழுதடைந்த மின் கம்பம் சரி செய்யப்படும். உங்களை தேடி உங்கள் நண்பன் என்ற பெயரில் தெருக்கள் தோறும் முகாம்கள் நடத்தி பிரச்னைகள் தீர்க்கப்படும். பொதுமக்களின் உடல்நலனை காக்கும் வகையில் பருவமழை காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். உயர்நிலை மின் கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.பிரசாரத்தின் போது பகுதி செயலாளர் கே. கண்ணன், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, பகுதி துணை செயலாளர் அஞ்சுகம் நகர் வீரா, வட்ட துணை செயலாளர் சண்முகம், அசோக் குமார், கல்பனா, ராமமூர்த்தி, பாரி நகர் சசி, விநாயகம், மகேந்திரன், சி.எச்.தினேஷ், மேகநாதன், சுரேஷ், கோபி, சாய் வெங்கடேஷ், சுந்தரேசன், நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். …

The post நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜா வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: